LEARNING STARTS HERE
Scroll Down To Take This Course
இந்த சேவை வேத / ஆகம பாடசாலை மாணவர்களுக்கு இலவசம் என்பதை அறியவும். இலவசமாக இச்சேவையைப் பெற்றிட susamskrutam@gmail.com என்ற மின்னஞ்சலைக் கொண்டு பாடசாலை நிர்வாகம் மூலம் அணுகவும்.
இச்சேவைக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம். நன்கொடைமூலம் இச்சேவைக்குப் பங்களிக்க விரும்புவோர் இங்கே க்ளிக் செய்யவும்.
“அரசு சமஸ்க்ருத நுழைவுத் தேர்வு” - தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைவருக்குமான ஓர் நுழைவுத் தேர்வாகும்.
இந்தத் தேர்வானது 10ஆம் வகுப்பிற்கு இணையானது என்ற அரசாணை உள்ளது.
இத்தேர்வின் மூலம் ஒருவர் தமிழ்நாட்டில் “ப்ராக் ஶிரோமணி” போன்ற மேல்நிலைக் கல்வியில் நுழைய இயலும் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சமஸ்க்ருதக் கல்லூரி இந்தத்தேர்விற்கான பாடத்திட்டத்தின் காணொளிப்பதிவுகளையும், வினா-விடைகளையும் இணையதளம் மூலம் வழங்குகிறது.
தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஸம்ஸ்க்ருதத்தில் மேற்கல்விகளைத் தொடர வேத-ஆகம பாடசாலை மாணவர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பாட முறை: பதிவு செய்யப்பட்ட காணொளிகள்
- தட்டச்சு செய்யப்பட்ட “வினா-விடை” (Guide-கள்)
- மொழி: தமிழ்
தாள் - 1: தமிழ் I & II (அல்லது) ஹிந்தி I & II
தாள் - 2: ஆங்கிலம் I & II
தாள் - 3: உரைநடை (ஸம்ஸ்க்ருதம்)
தாள் - 4: செய்யுள் (ஸம்ஸ்க்ருதம்)
தாள் - 5: நாடகம் (ஸம்ஸ்க்ருதம்)
- ஸம்ஸ்க்ருத்த் தேர்வின் தாள்களின் பதில்கள் (தாள் III, IV & V) அனைத்தும் ஸம்ஸ்க்ருத மொழியிலேயே எழுதப்பட வேண்டும்.
- குறைந்தபட்ச தேர்ச்சி : 35% மதிப்பெண்கள் பெறவேண்டும்.
இங்கே விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
1) தமிழ் (அல்லது) ஹிந்தி (த.நா. அரசு 10-ம் வகுப்பு பாடபுத்தகம்)
2) ஆங்கிலம் (த.நா. அரசு 10-ம் வகுப்பு பாடபுத்தகம்)
3) உரைநடை (ஸம்ஸ்க்ருதம்) a)ஸம்ஸ்க்ருத ‘ப்ரதமாதர்ச’ மற்றும் b)‘சகுந்தலாசரிதம்’ - (நீதி ச்லோகங்கள் உட்பட) பதிப்பு : R.S. வாத்யார் & சன்ஸ். கிடைக்குமிடம் : Giri Trading Agency, Mylapore, Chennai - 4.
4) செய்யுள் (ஸம்ஸ்க்ருதம்) ரகுவம்சம் - முதல் ஸர்கம் கிடைக்குமிடம் : Giri Trading Agency, Mylapore, Chennai - 4.
5) நாடகம் (ஸம்ஸ்க்ருதம்) மத்யம-வ்யாயோகம் மற்றும் கர்ணபாரம் கிடைக்குமிடம் : Giri Trading Agency, Mylapore, Chennai - 4.
1. கேள்வி: இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?
பதில் : Google Chrome அல்லது Micrsoft Edge போன்ற browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.