Digital Campus, Madras Sankrit College

Click here to 'TAKE THIS COURSE'






  • Description


    ஜோதிடம் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தேவையான ஒரு சாஸ்திரமாகும். திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்ற தினமும் மாறக்கூடிய ஐந்து விஷயங்களே "பஞ்சாங்கம்" என்று அழைக்கப்படுகின்றன. அடிப்படை ஜோதிடம் தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பஞ்சாங்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சென்னை சமஸ்கிருதக் கல்லூரி நடத்தக்கூடிய பஞ்சாங்க வகுப்பில் இந்த ஐந்து விஷயங்களும் மற்றும் அவைகளை அடிப்படையாகக் கொண்டு மாறக்கூடிய ராகு காலம், எமகண்டம், ஹோரை, சூலை, மேல் கீழ் சமநோக்கு நாட்கள் போன்ற பல விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளன.



  • FAQ


    1. கேள்வி: பஞ்சாங்கம் இணயவழிப்பாடங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?


    பதில்: பஞ்சாங்கம் இணையவழிப்பாடங்களை மேற்கொள்வதற்குத் தமிழ் மொழியும், கணினி பயன்படுத்துதலும் தெரிந்திருந்தாலே பொதும் மற்றெந்த தகுதியும் வேண்டாம்.



    2. கேள்வி: பஞ்சாங்கம் பாடங்களை இணையதளம் மூலம் கற்க ஓர் குறிப்ட்ட நேரத்தில் கணிணியின் முன் அமர வேண்டுமா?


    பதில்: வேண்டாம். பஞ்சாங்க பாடங்கள் முன்னமே பதிவு செய்யப்பட்ட காணொலிகளாகும். அவற்றைத் தாங்கள் சௌகரியத்திற்கேற்ப என்நேரமும் பார்த்துப் பயிற்சி பெறலாம்.



    3. கேள்வி: பஞ்சாங்க பாடங்களின் காணொலிகள் மொத்தம் எத்தனை? ஒவ்வொன்றும் பார்க்க எவ்வளவு நேரமாகும்?


    பதில்: பஞ்சாங்க பாடங்கள் அறிமுகப்பாடத்துடன் சேர்த்து மொத்தம் - 11. ஒவ்வொன்றும் சராசரியாக 20 நிமிடங்கள்.



    4. கேள்வி: பாடத்திட் டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?


    பதில்: உங்கள் சுயமுயற்சியால் நீங்களே கற்கும்படி வடிவமைக்கப்பட்டது இப்பாடத்திட் டம்.​ ஒரு பாடத்தின் காணொலியைப் பார்த்தபின், கேள்விகள் என்ற​ பகுதியில் சென்று, அப்பாடதிற்கான​ வினாக்களுக்கு விடையளிக்க​ வேண்டும். அதன் பின்னரே அடுத்த பாடம் திறக்கப்படும். இவ்வாறு இறுதிவரைச் சென்று உங்கள் முயற்சியால் முழுமையாகக் கற்கவேண்டும்.



    5. கேள்வி: பஞ்சாங்க பாடங்களில் பஞ்சாங்கங்களைத்தவிற மற்ற ஏதாவது விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றனவா?


    பதில்: பஞ்சாங்க பாடங்களில் ஐந்து அங்கங்களைத்தவிற அவற்றை அடிப்படையாகக்கொண்டு தினமும் மாறக்கூடிய ராகுகாலம், எமகண்டம், மேல் - கீழ்-சம-நோக்கு நாட்கள், குளிகை, சந்திராஷ்டமம் மற்றும் கரிநாள் இவைகளும் சொல்லித்தரப்பட்டிருக்கன்றன.



    6. கேள்வி: பஞ்சாங்க பாடங்களை பயிலிம்போது பாடத்தில் சந்தேகங்களோ தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்கள் அல்லது சிக்கல்கள் இருந்தால் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும்?


    பதில்: தாங்கள் Ask An Expert என்ற இடத்தில் கேள்விகளைப் பதிவிடவேண்டும். உறிய நபர் அதற்குரிய பதிலைத் தெரிவிப்பார்.



    7. கேள்வி: இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?


    பதில் : Google Chrome அல்லது Micrsoft Edge போன்ற​ browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக​ விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.